பிடா லவணம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பிடாலவணம் என்றொருக்காற் பேசின் உலகில்
விடாநீர் இழிவகலும் மெய்யே - விடலரிய
மந்தம் அகலும் வளரும் அதிகபசி
கந்த மலர்க்குழலே காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் அதிநீரும் மந்தமும் நீங்கி பசியுண்டாகும்