வெங்காரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வெங்காரஞ் சர்ப்ப விஷம்ஐயம் நீர்அடைப்பு
மங்காக் கிராணிரத்த மாம்மூலம் - பங்கஞ்செய்
வாயுவுடன் கல்அடைப்பு வன்கிருமி அஷ்டகுன்மம்
ஓயும் படிபுரியும் ஓது
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
அரியவெங் காரந்தான் ஐயறுக்குங் குய்யம்
மருவு கிரீச்சரத்தை மாற்றுந் - திருவனையாய்
சன்னீக்காஞ் சொல்லுஞ் சகல பிணிக்குமதாம்
பொன்னுக்கும் ஆகும் புகல்
- பதார்த்த குண சிந்தாமணி
வெங்காரம், சொறி, படை, எண்வகைக் குன்மம், தினவு, நீரடைப்பு, வாயு, கல்லடைப்பு, கிருமி, இரத்த மூலம், ஒழுக்குக் கிரகணி, பக்கவாதம், பல் நோய், மூத்திரக் கிரீச்சரம், கபம், பாம்பு போன்றவற்றின் விடங்கள், சன்னி ஆகிய நோய்களை விலக்கும்