காப்பி குடிப்பதைக் கன்னி நிறுத்திவிட்டாள் - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
காப்பி குடிப்பதைக் கண்டிப்பாய்க் கன்னி
..நிறுத்திவிட்டாள்;
காப்பி கசந்த கவலையிற் றானே
..நிறுத்திவிட்டாள்!
வேப்பிலை போற்கைப்பு வேண்டாமென் றேதான்
..நிறுத்திவிட்டாள்;
மாப்பிள்ளை யுந்தான் மறந்தா ரெனவே
..நிறுத்தினளே!
– வ.க.கன்னியப்பன்