வெண்ணிற ஆடையினர் வெள்ளையுள்ளம் கொண்டோர் - இருகுறள் நேரிசை வெண்பா
குறட்பாக்கள்
வெண்ணிற ஆடையினர் வெள்ளையுள்ளம் கொண்டோரே
பண்புச் செவிலியர் பார்! 1
மென்மையில் அன்னையாய் மேதினியில் ஆர்வமாய்க்
புன்னகைத்துக் காப்பார் புரிந்து! 2
– வ.க.கன்னியப்பன்
ஈராசு இடையிட்ட இருகுறள் நேரிசை வெண்பா
வெண்ணிற ஆடையினர் வெள்ளையுள்ளம் கொண்டோரே
பண்புச் செவிலியர் பாரென்பேன்! - திண்ணமே
மென்மையில் அன்னையாய் மேதினியில் ஆர்வமாய்க்
புன்னகைத்துக் காப்பார் புரிந்து!
– வ.க.கன்னியப்பன்