சவ்வர்ச்ச லவணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சவ்வர்ச்சம் என்னுந் தனிலவணத் தால்உலகில்
வெவ்வச் சுரஞ்சூலை வெப்புமறுங் - கவ்வுகின்ற
நாடி விரணமுடன் நாட்பட்ட குன்மமும்போம்
தேடியன மேயிதனைச் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

இது சுரம், கீல்பிடிப்பால் ஏற்பட்ட வெப்பம், நரம்புக்கிரந்தி, வயிற்று நோய் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-22, 8:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே