இயற்கை
நீலவானம் பூரண வெண்ணிலவு
நீல ஒளி பரப்பும் மின்னும் தாரகைகள்
நீல பட்டில் கொட்டிய வைரமணிகள்போல்
மணிகளைத் துடைக்கவந்த துணிபோல் வெண்மேகத் திரைகள் இங்கும் அங்கும்
நிசப்த இரவில் ஓடும் நதியின் ஓசை
மேடையில் நடனமாதின் நாட்டியத்திற்கு
இயைந்துவரும் இசை ஒலிபோல்
நிலவின் ஒளியில் மகிழ்ந்து அலர்ந்த
பொதிகையின் அல்லிப் பூக்கள் அதில்
ரம்மியமாய் இரவிலும் மெல்ல நீந்தி
வரும் வெள்ளை அன்னப்பறவைகள்
ஆஹா என்னென்பேன் இரவின் ரம்மியம்