சுட்டி குழந்தை
பட்டுக்குட்டி இவன்
பால மித்திரன்
பால் நிலாவுக்கே
சோறு ஊட்டுவான்.
கத்துக்குட்டி இவன்
கடலமிட்டாயி
காட்டு யானைக்கே
தண்ணி காட்டுவான்.
சிங்கக்குட்டி இவன்
சிரிப்பு மாத்திரை
சிலந்தி பூச்சிக்கே
வலைய பின்னுவான்.
தங்ககுட்டி இவன்
தரணி ஆள்பவன்
தானம் கொடுப்பதில்
கர்ணன வெல்வான்
வாலுகுட்டி இவன்
வள்ளல் செய்பவன்
வான வில்லுக்கே
வண்ணம் தீட்டுவான்.