உயிரே வந்துவிடு
உயிரே வந்துவிடு....!
வழி தொடரும் விழியோ..
நீ வரும் வழியில் புதைந்தது.
உன் வாசம் தேடி
சுவாசிக்கச் சென்ற இதயம்
காற்றில்லா கோளில் சிக்கியது.
அணை போட்டு தடுக்கமுடியாத
உன் நினைவு வெள்ளம்
என்னை மூழ்கடிக்க
முயற்சிக்கிறது.
விழியில் விதையான
உன் உருவம்
விருட்சமாய் வேரூன்ற
கண்ணில் கனமழை.....
உன் பெயர் சொல்லி துடிக்கும்
இதயம் ஊமையாகும் முன்...
உயிரே.... வந்து விடு...!