நெடுநாள் நண்பன்
நெடுநாள் நண்பன்
பையில் நழுவிநான் பையத் தரைவீழ
கையில் நிழல்சேர தாயெடுத்தாள் -- ஞாயிறு
திங்கள் விளக்கெரி நீங்கா விழும்நிழல்
பொங்குயிர் துஞ்சநிழல் போம்
தாயின் வயிற்றிலிருந்து சறுக்கி மண்ணில் விழுந்த என்னை
என்னை எனது நிழலுடன் தூக்கி கொஞ்சினள்.. அன்றிலுகுந்து
வெளிச்சம் விளக்கு வெளிச்சம் எரிகின்ற தழலில் வெளிச்சம்
சூரிய சந்திரர் வெளிச்சத்திலும் என் நிழல் என்னைத் தொடர்ந்தது
எனது உயிர் பிரியும் வரை எவரையும் மிஞ்சி என்னுடைய நெடுநாள்
தோழனாக கூடவே இருந்தது மறைந்து போனது.