தனிமையே

தனிமையே!
தனிமையே!
பிரியாதே!
பிரியமான தனிமையே!
பிறப்பிலும்!
இறப்பிலும்!
என்னோடு சேர்ந்தே!
பயணிக்கும் மாயையே!
உந்தன் அரவணைப்பில் தான்!
எந்தன் சுயத்தை!
உணர்கிறேன்!
என்னை எனக்கே!
புரியவைத்த புரியாத புதிர்!
தனிமையே!
உன் நிழலில்!
என் பிம்பத்தை பார்க்கிறேன்!
எங்கே சென்றாலும்!
மனம் தேடுவது!
இனிய தனிமையே!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (14-Sep-22, 11:38 am)
சேர்த்தது : இரமி
பார்வை : 126

மேலே