உன் இதய கதவு திறக்குமா 555

***உன் இதய கதவு திறக்குமா 555 ***
உயிரானவளே...
நான் முதல்முறை
வைத்த ரோஜா செடி...
முதலில்
மொட்டுவிட்ட புது மலர்...
என் இதயத்தில்
பூத்த முதல் இதயமலர் நீ...
உன்னைசுற்றியே
என் பயணம் உனக்காக...
தினம் தேன்
தேடும் வண்டல்ல...
உனக்குள்ளே கூடுகட்டி
வாழும் பட்டாம்பூச்சி நான்...
அருகில் வந்தால் வெட்கி
தலைகுனிவதை நிறுத்து...
நாணம் கொண்டவளே உன்
இதய கதவு எனக்காக திறக்குமா...
உன் காதல் மொழி
என் செவிகளை தொடுமா...
நீ தலைநிமிர்ந்திடும் நேரம்
நான் காதல் சொல்ல வேண்டும்...
உன் நெற்றியில்
குங்குமமிட காத்திருக்கிறேன்...
நிமிடமும் தாமதிக்காமல் என்
நெற்றியில் நீ இதழ்கள் பதிப்பாயா...
கவிபாடும்
உன் விழிகளுக்கு...
எழுத்தாணியால்
முயற்சிக்கிறேன் நானும்...
இரவில் மின்னும்
மின்மினி பூச்சியும் நீதான்...
பகலில் சிறகடிக்கும் பட்டாம்
பூச்சியும் நீதான் என் வாழ்வில்.....
***முதல்பூ.பெ.மணி.....***