அழகான அநாதைப் பெண்
நேரிசை ஆசிரியப்பா
அழகுப் பெண்ணொருத் திரயில நிலையம்
அகால வேளையில் அழுது நிற்க
நாயகன் அருகில் சென்று கேட்கவள்
அனாதை நானென விக்கிச் சொல்ல
நாயகன் அழைத்து சேர்த்தார் வீட்டில்
பெயரோ சாந்தி நல்ல பெண்ணென்று
அவளை அவனுக்கே மணமுடிக்க குடும்பம்
சென்றது அமைதியாய் இப்படி
வருடமும் பனிரெண்டு கடந்து சென்றதே
அன்று நாயகன் மாலை சீக்கிரம்
பணியினை முடித்து வீட்டிற்கு திரும்ப
சாந்தி குழந்தை மூவர்க்கும் மதரஸா
உருதுப் பாடம் சொல்லிக் கொண்டிருப்
பதைக்கண் ணுற்றவன் அதிர்ந்தவ வளிடம்
கேட்கவென் நிஜப்பேர் சாயிரா பானு
என்றதும் கிராமமே அவளை யேசினாரே
மறுநாள் காலை பிள்ளைகள் சகிதம்
சாயிரா கிராமம் விட்டு மாயமானாள்
நாயகன் தேடிட சிலநாளில் அவளது
சொந்த ஊரையும் தெரிந்து பார்க்க
முஸ்லீம் வாழும் ஊரது அங்கே
சாயிரா தனதுற வினரைக் கூட்டி
மூத்த பிள்ளைக்கு முறையாய்
சுன்னத்தும் முடித்து இருந்தது தெரிந்ததே
வெகுண்ட நமது நாயகன் சாயிரா
விடம்மே கேட்டு சண்டையிட கிராமமே
திரண்டு வந்ததா மவனது தலைய
வாங்கு வோமென மிரட்டியே விரட்டிட
அவனும் நீதிமன்ற வழக்கு போட்டானே