கற்பாசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பண்டை,மே கத்தைப் பறக்கடிக்கும் பேதிகட்டு
மண்டையெறி வாசனையி லாருங்காண் - தொண்டைக்
கனிக்குமொழி யூட்டுமிதழ்க் காரிகையே கார
கனிக்குமொரு கற்பாசி தான்.

- பதார்த்த குண சிந்தாமணி

மழையில் பிறந்த கற்பாசி, நீடித்த மேகம், கழிச்சல் இவற்றை நீக்கும்; இது வாசனைப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-22, 11:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே