சாதிலிங்கம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பேதிசுரஞ் சன்னி பெருவிரணம் நீரொடுத
காதகடி காசங் கரப்பான்புண் - ஓத
உருவிலிங்க சங்கதமா யூறுகட்டி யும்போம்
குருவிலிங்க சங்கமதைக் கொள்
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
ஆதி யிரதவுருக் காதலாற் சாதிலிங்கம்
ஓதில் இரதகுணம் உற்றுடலில் - தீதுபுரி
குஷ்டங் கிரந்தி கொடுஞ்சூலை வாதமுதல்
உட்டங்கு நோய்களையோட் டும்
- பதார்த்த குண சிந்தாமணி
பேதி, சுரம், சன்னி, புண், அதிமூத்திரம், காணாவிடம், இருமல், கரப்பான், சிரங்கு, நுணாக்காய் கிரந்தி, மண்டலகுட்டம், பிரமை, உடல்குத்தல், வாதம், முகநோய்கள் ஆகியவற்றைச் சாதிலிங்கம் போக்கும் .