நெல்லிக்காய்க் கந்தகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நெல்லிக்காய்க் கந்திக்கு நீள்பதினெண் குஷ்டுமந்தம்
வல்லை கவிகைகுன்ம வாயுகண்ணோய் - பொல்லா
விடக்கடிவன் மேகநோய் வீறுசுரம் பேதி
திடக்கிரக ணீகபம்போந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

நெல்லிக்காய் கந்தகம் பதினெண்வகை குட்டங்கள், மந்தம், கவிகை மகோதரம், குன்மம், வாயு, கண்ணோய், மகாவிடம், மேகம், வாதசுரம், வாதக்கழிச்சல், கபம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-22, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே