கண்ணன் குழலோசை
அன்று பலியின் அகந்தை அழித்திட
வாமனனாய் இறங்கி வந்து விண்ணும்
மண்ணும் அளந்து முடிவில் மூன்றாம்
அடியாய் பலியின் சிரசில் அளந்தான்
மாமாயன் அவனே மீண்டும் மண்ணில்
தேவகி மகனாய்ப் பிறந்தான் பிறந்து
கோகுலத்தில் யசோதை மகனாய் வளர்ந்து
குழல் ஊதி மாடு மேய்த்தான்
கோவிந்தன் குழல் ஓசைக்கு ஆவினம்
மெய்மறக்க கோபியர் தம்மையே மறக்க
ஏழுலகும் மெய் மறந்து கண்ணன்
குழலோசையே கதி என்று வேறு
தொழில் ஏதும் செய்யாது இருந்தனவே
உலகெலாம் அளக்கும் மாமாயன் அவனே