மதியது சிதைவினை

மலை, மழை, மதகு, மடை, மணல்,
மண், மரம், மந்தி, மனிதன், மலம்
மணம், மங்கலம், மனைவி, மஞ்சம்,
மலடி, மழலை, மகள், மகன்,
மக்கள், மனம், மகிழ்ச்சி, மதிப்பு,
மறதி, மடைத்தனம், மறுத்தல்,
மருமம், மவுனம், மனனம், மன்றம்,
மதி, மன்னன், மறை, மன்றாடல்,
மயிர், மத்தி, மருத்துவம், மருந்து,
மரணம், மரியாதை, மலர், மயானம்
மருதம், மரித்தல், மறைத்தல்
என்பதாய் மகரமே ஈன்றது வார்த்தையை இதிலே மதம் என்பதோ மயக்கத்தை தந்தது
மனிதருள் மதியது சிதைவினை கண்டால்
யானை மதம் கொள்வதைப் போலே
மனித மனமது மதத்தினைப் பற்றி
மக்களை மதிக்காமல் மலட்டாறாய் பாயும்
இறை பக்தியும் நிரம்பக் கொண்டால்
இறைவனே தான் என்றேக் கூறித்
திரியும் மனிதக் கூட்டம்
உலகில் பெருகும் எனவே
தமிழன் வைத்தான் அதற்குப் பெயராய் மதம் என்றே.

எழுதியவர் : நன்னாடன் (10-Oct-22, 1:24 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே