மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தூய அன்பின் அவதாரம்
இரக்கமும் கருணையுமே அன்பின் ஆதாரம்!
பூரண அன்பு உள்ள மனதில் என்றும் அமைதி
மௌனம் கொண்டு செல்லும், தியான சந்நிதி!
மெய்மறந்த தியானம் தருவது அமைதி-சுகம்
அன்பு பொழியும் மனமே அமைதியின் அகம்!
தூயஅன்புடன் அமைதி இன்பத்தின் நீர்வீழ்ச்சி
இவரது மனதில் நிறைவது தெய்வீக மகிழ்ச்சி!
புனிதமான மகிழ்ச்சி தருவது உவகை பரவசம்
அன்பு அமைதி கூடலில் ஆனந்தம் இலவசம்!
அளவிலா ஆனந்தத்தில், அண்டமே கைவசம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (10-Oct-22, 3:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 283

மேலே