புதியதாய் காதலெனும்

சிந்தியல் வெண்பா

நல்லாடை சூடியுமே கோவகை பாம்பின
நஞ்சை மனதிலே வைத்தே சுவைமிகை
சொல்வர் இறைத்தூ தராய் -- (க)

கள்ளம் மிகுந்த குணத்தை கவசமாய்
கொண்ட தலைவர் தலைமையில் ஆட்சியும்
தோன்றின் கிடைக்குமோ தீர்வு -- (உ)

பணத்தில் மனதைப் பதிப்போர் அவருள்
உறவும் பகையும் எதுவும் பொருளாய்
தெரியும் விலையுளே மெய் -- (ங)

மருந்தும் மருத்து வருமே பழையநாளில்
தெய்வம் நவீன நிலையில் எதுவும்
பணத்தினை கைக்கொ ளவே. -- (ச)

காமமும் கள்ளமும் ஒன்றாய் பிணைந்து
புதியதாய் காதலெ னும்வகையில் இன்று
எவரையும் ஆளுதின் றே. -- (ரு)
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Oct-22, 5:28 pm)
பார்வை : 62

மேலே