நீலம் - நேரிசை வெண்பா

நீலம்
நேரிசை வெண்பா

குதிவலிமே கம்பித்தங் கூறரிய பாண்டு
மதிமயக்கம் எல்லாம் மருளும் - மதிநுதலே
புத்தியொடு மேன்மேலும் போகசுகம் உண்டாகும்
சுத்தநறும் நீலத்தாற் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

நீலக்கல் குதிகால்வலி, மேகநீர், பித்தம், பாண்டு, அயர்ச்சி இவற்றைப் போக்கி நல்லறிவையும் சுக்கிலப் பெருக்கத்தையும் உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-22, 7:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே