ஹைக்கூ சிதறல்......
*வாடகைபாக்கி
வெளியேற்றப்பட்டது சிலந்தி
ஒட்டடை அடிக்கயில்...
* வைக்கோல்கன்றை
முத்தமிடுகிறது
வயிறு காய்ந்த பசு...
*சிலைகள் நடுவதற்கும்
எடுப்பதற்குமாய்
மாறுகிறது அரசு...
*வாக்குவாதம்
பணமற்ற
ஏ டி எம்மோடு ...
* பரணில் தொலைந்த
புத்தகங்கள்
வயிறு பெருத்தபெருச்சாளி....
*சாதகமற்ற சூழலில்
சாதகம் சொல்கிறது
ஜோசிய கிளி...
*சருகுகளின்
குரல்வளையில்
முனுமுனுக்கிறது
காற்று..
*சுற்றுலா கிளம்பியது
புத்தா டிராவல்ஸ்
எலும்பச்சம்பழத்தொடு
இரண்டொரு எறும்புகளும்...
*கட்டிட நெருசலில்
மூச்சுவிட சிரமம்
நகரத்து பிள்ளையார்...
*தேநீரோடு
தொடங்கப்பட்டது
வரதட்சணை விவாதம்...
*மாப்பிள்ளை கிடைத்தான்
மாதவிலக்கு நின்றபோது
முதிர்கன்னி...
*நல்லகாலம் பொறந்திருச்சு
முதியோர் இல்லத்தின்முன்
குடுகுடுப்பைக்காரன்...
*இடம்பிடிக்கும்
அவசரத்தில் இறந்துகிடக்கிறது
பேருந்து இருக்கைகளில்
கைக்குட்டை...
*இலவசக்காற்றாலை
நகராட்சி குழாய்..
*பார்வையிற்ற ஒருவரை
சாலை கடத்தி
திரும்புகையில் நிகழ்ந்தது
அவனுக்கான விபத்து...
//mani