இதயமும் இதயமும் கொள்ளையடித்தால் 555

***இதயமும் இதயமும் கொள்ளையடித்தால் 555 ***
ப்ரியசகியே...
உன்னிடம் நான் பேசவில்லையென்று
வருத்தம் கொள்கிறாய்...
வேலைபளு நீயும் நானும் சேர்ந்து
சிரிக்க காலம் போதவில்லை மானே...
பேசாமல் இருந்தால்
பிரியம் குறைந்துவிடுமா...
பேசாத நிமிடத்தில்தானடி
எப்போது பேசுவது...
இப்போது என்ன
செய்துகொண்டு இருக்கிறாய்...
என்
சிந்தனை எல்லாம்...
உன்னைத்தானே
நினைத்துக்கொண்டு இருக்கிறது...
நான்
சொன்ன காதலுக்கு...
கண்ணீர் பரிசளித்தவள்
நீ ஆனந்தத்தில்...
எப்படி உன்னை
மறக்க முடியும்...
உன் புகைப்படத்தில்
மெளனமாக இருக்கும்...
உன் கண்களை நான்
பார்க்கும் போதெல்லாம்...
என்னிடம் ஆயிரம் காதல்
மொழிகள் பேசுதடி...
கடல் போன்ற என் உள்ளத்தில்
கையளவு இதயம்தான்...
கையளவு இதயத்தில்
கடலைவிட பேரன்பு...
உன்மீது நான்
வைத்திருக்கிறேனடி...
நீ சுவாசிக்கும் காற்று
இயற்கை அல்ல...
நான் அனுப்பும்
உயிர் மூச்சிதான்...
என் அன்பே
நீ உணர்ந்துகொள்.....
***முதல்பூ.பெ.மணி.....***