உரியதோர் ஞானங்கற் றுள்ளந் திருத்தி அரிய துணிவதாம் மாண்பு – அறநெறிச்சாரம் 187

நேரிசை வெண்பா

சோறியாறும் உண்ணாரோ? சொல்யாருஞ் சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ? - தேறி
உரியதோர் ஞானங்கற் றுள்ளந் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு 187

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சோறு உண்ணுதலையும், அரியன செய்வேனென்று சொல்லுதலையும், ஊர்திகளில் ஏறிச் செல்லுதலையும் உலகத்துள் எல்லாரும் செய்வர், கற்றற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து, மனமாசறுத்து செயற்கரியன செய்து வீடுபேற்றினையடையக் கருதுவதே பெருமையாகும்.

குறிப்பு: சோறு + யாரும் = சோறியாரும், ஏறு: ஏறப்படுவது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Oct-22, 9:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே