உன் விழியில் கண்டேன் காதல் மச்சம் 555
***உன் விழியில் கண்டேன் காதல் மச்சம் 555 ***
பேரழகே...
குவிழ்ந்த உன் இதழ்கள் ஓரம்
நான் கண்ட முதல் மச்சம்...
மார்பின்மீது விழுந்த
கூந்தலை ஒத்திகையில்...
தோள்பட்டைமீது
வலிமையான மச்சம்...
கண்டாங்கி புடவைக்கட்டி
முந்தானை சொருகயிலே...
என்னை சொக்க வைத்த
உன் இடையோரே மச்சம்...
தண்ணீர் குடம் இடிப்பில்
வைத்து சுமக்கையில்...
உன் கெண்டைக்காலில்
கண்டேன் வாலிப மச்சம்...
உன் விழிகளை நேருக்கு
நேர் பார்க்கையில்...
உன் விழியிலும்
கண்டேனடி காதல் மச்சம்...
சிவந்த உன் மேனியில் எத்தனை
மச்சம் வைத்தானோ பிரம்மன்...
உன்
மேனியின் மச்சங்களை...
உன் சம்மதமின்றி தழுவி
செல்லும் தென்றலை போல...
உன் நேர்வகிடுல்
துளிநீராய் உருவாகி...
உன் மேனியின் மச்சங்களை
தழுவி செல்ல எனக்கும் ஆசை...
உன் சம்மதத்தோடு.....
***முதல்பூ.பெ.மணி.....***