உள்ளே செல்
பட்டப்பகல் வீடு திறந்திருந்தது
பேன் ஓடும் சத்தம் அறைகளில்.
நேராக சாமி அறைக்குள் சென்றான்.
வேண்டிய வெள்ளிச் சாமான்களை
அள்ளிக்கொண்டு வெளியேறிய
திருடன் சற்றே சுற்றும் முற்றும்
பார்த்தான். அனைவரும் அவரவர்
"செல்லில்" மூ
ழ்
கி
இருந்தனர்.
பதறாமல் நடந்தான் சாமியை கடைசியாக கும்பிட்டபடி .
செல்லை நோண்டிக்
கொண்டிருப்பவர்கள் உடனடியாக
விழித்துக்கொள்ள வாய்ப்பில்லை
என்று உறுதியாக நம்பிய திருடன்
ரிலாக்ஸ்டாக வெளியேறினான்.