மூளியான சிற்பமா
மூளியான சிற்பமா?
சிற்பமான மூளியா
வாசலில் கோலம்
வீட்டுக்குள் அலங்கோலம்.
வண்ணந்தீட்டிய
சுவரெங்கும்
எச்சில் காரல் திட்டுக்கள்.
எல்லாம்
துடைத்தெறியப்பட்டன.
சச்சரவு எனும்
நச்சரவு புகுந்து கொண்டது.
ஒன்றை ஒன்று கொத்தத்
தலை தூக்கின.
எல்லாம் இருந்ததுபோல்
தெரிந்தது.
வாழ்வைக் காணோம்.