ஆவாரம்பூ மஞ்சளாய்
ஆவாரம்பூ மஞ்சளாய்
மலர்ந்திருந்தாள்.
விரிந்த இதழ்கள்
அழகை எழுதிக்கொண்டிருந்தன.
பார்வை பட்ட இடத்தில
பூ பூத்துக் கொண்டிருந்தது.
கொண்டையை இறுக்கி முடிந்தாள்
மனம் நழுவ மறுத்தது.
பார்வை பட்ட இடங்களில் எல்லாம்
பூக்கள் பூத்துக் கொண்டே
இருந்தன.
ஒளியின் நிழல்
ஆலமரமாய் விரிந்து பரந்தது.
விளையாடிக் கொண்டிருந்த
பூங்குருவிகள் சிறகசைத்தன.
ஓசைகள் அடங்கிய
சிறுபொழுதில்
பேய் அறைந்ததுபோல் இருந்தது.
மௌனத்தில் சித்திரவதையில்
மனச் சித்திரங்கள்
குறுக்கு கோடுகள் ஆயின.
கொச்சைக் கழற்றிவிட்டு
நடந்து சென்றாள்.
சலங்கை சத்தம்
இம்சித்தது