சூரியச் சிற்பத்திலிருந்து

சூரியச் சிற்பத்திலிருந்து
ஒளி கசிந்தது.
இருள் திட்டுக்களை
அவசரம் அவசரமாகத் துடைத்தது.

காலை தீப்பற்றிக் கொண்டது .
வானவில்லின் ஏழுநிறங்களும்
பிரிந்து நடந்தன.

ஒன்பதுமணி, பத்துமணி.
கூடுகள் நெரிப்பட்டன.
வேர்வை சொட்டுக்களில்
நெருப்பு அணைந்தது.
மூக்குப்பூவில் விழுந்த
பனித்துளியை
சூரியன் உறிஞ்சினான்.

நட்சத்திரங்கள்
இருப்பைக் காப்பாற்ற
நகர்வதும், இருப்பதுமாய்.
புணர்ச்சி நுகர்வின்
போதாமை, பேதைமை
இருளைக் கவ்விப் பிடிக்கிறது
ஒளிக்கசிவின் பெருக்கில்
திக்குமுக்காடலாம்
திக்குத் தெரியாமலும்
போகலாம்.

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:49 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 30

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே