வெற்றியின் வெல்வழி1
வெல்வழி...1.
⚘⚘⚘⚘⚘
நான் அவராக..
-----''--''---''---"
மாநிலத்தின் முதல்வராக
தேசத்தின் தலைவராக
உலகத்தின் ஒற்றை
அடையாளமாக ..
நான் அவராக
உயர முடியுமா ?
கனவுகள் கண்டுகண்டு
கண்கள் பிதுங்கிவிட்டன !
அனைத்திற்கும்
ஆசைப்பட்டு
அடிபட்டு வீழ்ந்ததே மிச்சம் !
பள்ளத்தாக்கில் விழுந்துகிடப்பவன்
பனிமலைச் சிகரத்தில்
பாதம் பதிக்க மாட்டானா !
இருளில் கிடைத்த விடுதலையை
விழித்திருந்தோரே
அபகரித்துக் கொண்டனரோ !
வான்மதிக்கும் விண்மீனுக்கும்
செவ்வாய்க்கும்
செந்தீ கக்கிச் செல்லும்
விண்கலம் அனுப்பி
வீரம் காட்டுவோர்
இன்றும்
வீதிகளில்
பசித் தீயில் வெம்பிக் கிடப்போரின்
வேதனை அறிவாரா!
குறை கண்டு
குற்றம் கூறித் திரியும்
கூட்டத்தைத் தாண்டி
முறைசெய்து
திறம்காட்டி
வெற்றிகளால்
வீட்டையும் நாட்டையும்
வெகுவாய் நிரப்பி
மகிழ்கின்றதே
ஒரு சிறு கூட்டம்..
நான்
தோல்விப் பள்ளத்தாக்கிலேயே
துவண்டுடிடுவேனா
இல்லை
வெற்றிச் சிகரத்தில்
தாள் பதித்து
தடம் அமைப்பேனா!
நான் அவனாகவே
அடையாளமற்றுப் போவேனோ
இல்லை இல்லை
அவராக உயரப் போகிறேன்
அவராக!
....தொடரும்.