இதயத்தில் இடம்
தென்றல் போல்
நீ நடந்து வந்து
பூட்டியிருந்த எந்தன்
இதய வாசலை திறந்து
உரிமையோடு
என் இதயத்தில்
அமர்ந்துக் கொண்டாய்...!!
இது அத்துமீறிய செயல்தான்
வழக்கு தொடுக்க முடியும்
இருந்து போதும்
உந்தன் செயலை ரசித்தேன்
இதயத்தில் இடம் தந்தேன்..!!
--கோவை சுபா