ஏதுமற்ற பேரிருண்மை
என்னைப் பற்றிய பயம் வேண்டாம்
நிம்மதியாக உறங்கிவிடு
இதோ அருகில் தான் இருக்கிறேன்
ஒரு காத்து மாதிரி
அப்பப்போ ஆக்ரோஷமா வீசிக் கடப்பேன்
மற்ற எல்லா வேளையும்
இனிமையாக பேசிக் கடப்பேன்
ஆனால்
இல்லாமல் போய்விடமாட்டேன்
உன் நினைவின் பிரபஞ்சம் எங்கும்
வியாபித்திருப்பேன்
நீ உயிர்வாழ வேண்டும் இல்லையா
பூக்காரன் கவிதைகள் - பைராகி