மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒருமாது
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
மயங்குகிறாள் ஒருமாது
மனமெல்லாம் புயலாக /
தயங்குகிறாள் சிறுபோது
தன்மானம் தலைதூக்க /
மலராக மொட்டவிழும்
மர்மங்கள் சுட்டிடுமோ /
உலகோரின் கட்டுகளும்
உத்தமனை விட்டிடுமோ/
பாதைகளைப் பார்த்தபடி
பாவியிவள் ஏங்குவதோ /
வாதையெலாம் போதுமென
வாராயோ மன்னவனே /
துயரெமெலாம் துடைத்துவிடத்
துன்பமெலாம் அகற்றிவிட /
உயிரெல்லாம் உணர்வினிலே
உற்சாகம் பொங்கிடுமே/
போதுமொரு வார்த்தையுமே
புனிதையவள் பூரிக்க /
மோதுகின்ற எண்ணமெலாம்
மோகனமே பாடிடுமே //
-யாதுமறியான்.