தேவதை

நெற்றிப்பொட்டும்
வகிடெடுத்த உச்சிக் குங்குமமும்
கருங்கூந்தலில் மணக்கும்
மல்லிகைச் சரமும்
அடிமீது அடிவைக்கும்போது
ஊஞ்சலென
அசைந்தாடும் கம்மலும்
அழகுக்கு அழகு சேர்க்கும்
வைரக்கல் மூக்குத்தியும்
மண் அளந்த
மென்பஞ்சுப் பாதங்களும்
சமர் புரியும்
இருகண்விழிகளும்
மலர் முகத்தில்
முத்துப் பல்வரிசையும்
நிலவொளியில் மின்னும்
இரு செவ்விதழ்களும்
என்ன தான் ஜரிகை வைத்த
பட்டுப் புடவை
உடுத்திக் கொண்டாலும்
களையிழந்த முகம்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
வயோதிகத்தை
ஒவ்வொரு நடராஜனையும்
உள்ளிருந்து ஆட்டுவிப்பவள்
அந்த சிவகாமி அல்லவா?

எழுதியவர் : ப.மதியழகன் (17-Nov-22, 9:26 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
Tanglish : thevathai
பார்வை : 301

மேலே