அபத்திய பதார்த்தங்கள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

கொள்ளு காடி குமட்டிக்காய் கோழி பன்றி கொக்குடனே
முள்ளிற் பெரிய பாகற்காய் முதிரும் அவரை பயற்றங்காய்
பள்ளத் தெழுந்த மடற்சேம்பு படரும் வள்ளி பாலையிவை
எள்ளத் தனைதான் தின்பீரேல் எல்லா மருந்தும் இழந்தீரே 1

- பதார்த்த குண சிந்தாமணி

மாங்கா யிளநீர் மாதுளங்காய் மாவின் பண்டம் புளிகடுகு
தேங்காய் நெய்பால் கிழங்குபழம் தின்னுங் காயம் வெங்காயம்
ஈங்கா தரிக்குஞ் சுராபானம் ஈச்சங் கள்ளு பனங்கள்ளும்
ஆங்கே யிவற்றுள் ஒன்றேனும் அருந்தா திருந்தால் மருந்தாமே 2

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

கொள்ளு, காடி, குமட்டிக்காய், கோழி, பன்றி, கொக்கு, கொம்பு பாகல், பாலைக்கீரை, மாங்காய், அவரை, பயற்றங்காய், சேம்பு, வள்ளி, பால், இளநீர், மாதுளங்காய், மாப்பண்டம், புளி, கடுகு, தேங்காய், எருமை நெய், கிழங்குகள், முப்பழங்கள், பெருங்காயம், வெங்காயம், கள்ளு, ஈச்சன்கள்ளு, பனங்கள் இவை அனைத்தும் பத்தியத்திற்காகாத பொருட்களாம் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-22, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே