மலரன்ன கண்ணாள் மதிமுகம் கண்டேன் - குறள் அந்தாதி
ஒரு விகற்ப குறள் வெண்பாக்கள்
மலரன்ன கண்ணாள் மதிமுகம் கண்டேன்
பலர்காண நாணினாள் பார்த்து! 1
பார்த்தவள் நாணப் பரிந்துநான் கூறினேன்
நேர்கொண்ட பாவையே நில்! 2
நிற்கநான் சொல்லவே நின்றவள் பார்த்தாளே
பொற்புடை நாணம் பொலிந்து! 3
பொலிந்த முகந்தனில் புன்னகை பூத்துச்
சொலிப்புடன் சொன்னாள் சுகம்! 4
சுகந்தமாம் பெண்ணவள் சொன்னாள் சொலித்து
மிகநன்றாம் காதல் மிகுந்து! 5
– வ.க.கன்னியப்பன்