பஞ்சமென்பது தமிழ்நாட்டில் இல்லையே

பஞ்சமென்பது தமிழ்நாட்டில் இல்லையே

நேரிசை ஆசிரியப்பா

என்னவளம் இல்லை இந்ததிரு நாட்டில்
ஏன்கையை யேந்தவேணும் வெளிநாட்டில் ஒழுங்காய்
பாடுபடு வயக்காட்டில் உயரும் உன்மதிப்பு
அயல்நாட்டில் விவசாயி சரிதானே உண்மை
பஞ்சம் வந்த தேசமா தமிழ்நாடு
பொய்யை உண்மை போல பேசி
மக்களை திராவிடர் உளரிய
உளறல் அன்றி கொஞ்சமும் நிஜமிலையே

உலக யுத்தம் வந்த போது
வந்த பஞ்சமும் செயற்கை பஞ்சம்
சீனப் போரின் போதும் அப்படியே
மாரி பொய்ப்பின் என்ன பஞ்சம்
வந்த தில்லையேத் தமிழ்நாட்டில்
தமிழன் என்பவன் வெகுளி
யார்சொல் லையும் நம்புவன் எளிதிலே



....

எழுதியவர் : பழனி ராஜன் (21-Nov-22, 1:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே