பாசப் பறவைகள்
வயோதிகம் வாழ்க்கையில்
தவிர்க்க முடியாத பருவம்
ஆனால்
காதலுக்கு மூப்பில்லை...!!
தள்ளாத வயதிலும்
சுருக்கம் விழுந்த தேகத்துடன்
பாசத்தின் நெருக்கத்தோடு
வாலிபத்தின் இனிமையை
சுவைத்துக் கொண்டே
பாசப் பறவைகளின்
உல்லாசப் பயணம்..!!
--கோவை சுபா