பயணம்

மகிழ்வின் தொடக்கமும்,
விட்டு வந்த ஏக்கங்களின்
தேக்கமாகவும் தொடர்கிறது.
என்ன மாற்றம் காண போகிறோம் என்னும் தவிப்பும்,
சில ஆச்சரியங்களும் அங்கு அணிவகுப்பதை காண்கிறேன்.
மாத இடைவெளியில் காண்பதால்
தொடக்கபுள்ளியில் மாற்றம்
அறிகிறேன்.
எண்ணி கொள்கிறேன் இதற்கே வியக்கின்றாயே,
சிலபல வருட இடைவெளியில்
புகைப்படங்களில் திருப்தி கொண்டு,
வயதில் சிலவற்றை கூட்டிகொண்டு,
தான் பிறந்த மண்ணை காண வரும்
படைவீரர்களை காணும் போது
ஆடை துறப்பவன் மட்டுமே ஞானி அல்ல,
இங்கே ஆசை துறப்பவனும் ஞானி ஆகிறான்.
இங்கே படைவீரன்
போர்களத்தில் நிற்பவன் மட்டுமல்ல,
தன் பந்தம் காக்க
வெயிலிலும், மழையிலும்
காலம் கரைக்கும் ஆணோ, பெண்ணோ
அனைவருக்கும் ஏற்றதே.
தன் பதின் பருவத்தை புழுதியால்
கொண்டாடிய பிறந்த மண்ணை காணும் போது,
விழியோரம் துளிர்க்கும் நீர்
கூறும் அவன், அவளின் ஏக்கத்தை…….

எழுதியவர் : நிலவன் (23-Nov-22, 10:26 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : payanam
பார்வை : 39

மேலே