கடைசிப் பயணம்
குறள் வெண்பா
இறந்து பிறந்தி (இ)றந்து எதையும்
துறந்துதான் போன துயிரு
ஆசிரியப்பா
இருக்கையில் அடங்காதான் இறந்து போக
கால்கைகள் இரண்டைக் கட்டி வேட்டி
போர்த்தி வாயில் வெற்றிலை இடித்தப்பி
திறந்த கண்ணை மூடித் தேங்காய்
ஒன்றையும் உடைத்து தலையின் பக்க
வாட்டில் வைத்து வாங்கி வந்த
மாலையைக் கழுத்தில் போட்டு தலைமாட்டில்
பெரிய விளக்கேற்றி கால்மாட் டில்சூடன்
கொளுத்தி உற்றார் ஊருக்கு
தகவல் சொல்லி வரவை நோக்குவாரே
பாடை கட்ட மேளம் சங்கு
சொல்லிப்பின் குழியை வெட்ட
வெட்டியா னுக்கும் சொல்லி போர்த்த
காடாநூல் துணியும் அன்றிக் கூரை
புடவையும் எண்ணெய் சீக்காய் சாவு
சாமான்கள் கடையில் வாங்கச் செய்வார்
அக்கம் பக்கம் விசாரிக்க வந்தோர்
உட்கார நாற்காலி யுடன் பந்தலும்
வெடிகள் ஐம்பது அறுபது சரங்கள்
வாங்க சாவு வீடும் களைகட்டும்
காபி தணணீர் எல்லார்க்கும் வழங்க
உத்தார் பெத்தார் கூடவே உறவு
சேர்ந்த பின்னே இன்னும் என்ன
தூக்குங்க தூக்குங்க என்று கூச்சல்
அங்கங் கேயெழும் இராகு காலம்
முடிய இன்னும் அரைமணி இருக்கு
என்பான் ஒத்தன் மத்தவர் அதற்குள்
குளிப்பாட்டி ரெடியா கட்டும் என்பார்
இப்படி வீடே அமைதியில் பரபரக்கும்
தூக்க கொள்ளி சட்டி ரெடி
பிள்ளை மீசையை சிரைக்க கூப்பிடுங்கோ
புள்ளை யாண்டான் மீசை சிரைத்து
தண்ணீரில் குளித்தவன் நடுநடுங் கவனுக்கு
காடாவை கிழித்துப் பூணூல் மாட்டி
நிற்க வைப்பர் நெற்றிப் பட்டை
சாத்தி பின்னே தூக்கி வந்த
சடலத் தைவண்டி ஏற்றி கொள்ள
மற்றவர் பின்தொடர்ந் திடுவர்
மோட்டார் சைக்கிளில் இடுகாட்டில் குடிபிள்ளை
இறங்க பிணத்தை கீழே வைத்து
அரிச்சந் திரன்முன் சங்கூதி மயான
காண்டம் பாடுவன் சவத்தையும் குழியில்
வைத்து வாக்கரிசி போட்டு தட்டில்
காசும் போடுவர் பின்னே கொள்ளி
போட்ட மகனின் தோளில் மண்பல்
லாவில் தண்ணீர் வைத்துக் குழியை
சுற்றச் சொல்லி சுற்றுக்கு கொருஓட்டை
யிட்டுநீர் ஒழிக்கி திரும்பி பார்க்கா
போவெனபார் இடுகாட்டு சுருட்டு
ஆளா ளுக்குவாங்கி புகைத்து திரும்புவாரே