பேச்சு

வார்த்தைகள் சிறந்ததா?
இல்லை
மௌனம் சிறந்ததா?
பேசாத மௌனம் கூட
சில நேரங்களில் தோற்று போகிறது.
ஏனென்றால் இங்கே
அழுகின்ற குழந்தை தான்
தேவையானவற்றை அடைகிறது.
இதில் சிறு தணல் எரிந்தாலும்
பின்பு தணிந்து விடுகிறது.
சில நேரங்களில் மௌனம்
மனதை மறைத்து விடுகிறது.
சில சொல்லப்படாத ஏக்கங்களை
படர விட்டு விடுகிறது.
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்.
இங்கே
மௌனமும், வார்த்தைகளுக்கும் இடையே
“ஒன்று வென்று,ஒன்று தோற்கும்”
இருக்கும் இடம் பொறுத்து.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:03 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : pechu
பார்வை : 67

மேலே