மின்சார காதல்
மின்சார காதல் ⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓
மின் விளக்கைப் போடுங்க
விளக்கு எரியும்
மின் கட்டணம் கட்டுங்க
மனசு எரியும்....
கரண்ட் இருந்தா பாருங்க
காற்றாடி சுத்தும்
கட்டணம் கட்டுனா
தலையே சுத்தும்...
பில்டர் போடுங்க
தண்ணீர் சுத்தம்
பில்லை கட்டுங்க
பாக்கெட் சுத்தம்...
மின் மோட்டார் போட்டா
தண்ணீர் வரும்
மின்கட்டணம் கட்டுனா
கண்ணீர் வரும்...
மைக்ரோ ஓவன்ல
கொழம்பு கொதிச்சா
மாதாந்திர கட்டணத்துல
மனசு கொதிக்கும்...
ஏசியா போட்டதும்
குளிராத்தாங்க காத்து வரும்
கட்டணம் கட்டுங்க
குளிர் காய்ச்சல் சேர்ந்து வரும்...
ஹீட்டரை போட்டா
சூ...டா வரும் தண்ணி
மீட்டரை பாருங்க
குளிக்கனுமா...னு எண்ணி...
தொலைக்காட்சி திறந்தா
மந்திரி தான் வருவார்
ஆதார் இணைக்க
உத்தரவாதம் தருவார்...
நல்லதே நடக்குமுனு
நம்பிக்கையை ஊட்டி
தொடச்சொல்லுரார்
மின்கம்பியைக் காட்டி...
மின்சாரம் இல்லாம
எரியுர விளக்கா
கண்டுபிடிச்சுத் தாடா
என் கடவுளே எடிசா...
விடியும் விடியுமுனு
ஓட்டுப் போட்ட கூலி
விடியரதுக்குள்ள
வீடே காலி...
கட்டில கொண்டுபோய்
வீதியில படுங்க
கட்டணத்தை குறைக்கனும்னா
அதுதா வழிங்க...
பிள்ளையார்தான் பிடிச்சோம்
குரங்காய் போச்சு
சொல்லாத கனவு
சும்மா தான் இருக்கனும்...
எப்படா விடியும்jQuery17108931222756229702_1669716536021?? ¿???????.....
🔦🔦🔦🔦🕯🕯🕯🕯🕯🔦🔦🔦🔦🔦🔦