உண்மை அன்பின் விலை 555

***உண்மை அன்பின் விலை 555 ***
ப்ரியமானவளே...
என்னைவிட்டு நீ முழுவதும்
விலகி செல்ல நினைக்கிறாய்...
உன் பேராசை அதுவென்றால்
தடுப்பதர்க்கு நான் யார்...
உன்னைத்தவிர வேறேதும்
வேண்டமென சொன்னவள்...
என்னையே
வேண்டாமென சொல்கிறாய்...
நீ வேண்டாமென
சண்டையிட்ட உறவு...
இன்றுவரை
எனக்காக காத்திருக்கு...
அன்று உண்மை அன்பை
உதாசீதம் படுத்தினேன...
இன்று என் அன்பை நீ
உதாசீனம் படுத்திவிட்டாய்...
உன்னால் என் இதயம்
வலிக்கும் போதுதான்...
என்னால் வலிதாங்கும்
இதயத்தை நான் உணர்கிறேன்...
அன்புக்கு விலை
இல்லையென யார் சொன்னது...
எல்லோருக்காகவும்
விழியில் நீர் சுரக்காது...
எதையும்
எதிர்பார்க்காத அன்புக்காக...
இரவில்
தலையணை நனையுமே...
உண்மை அன்பின்
விலை அதுதான்...
நான் வாசிக்க
நினைத்த புத்தகத்தைவிட...
என்னை வாசிக்க நினைத்த
புத்தகத்தை தவறவிட்டுவிட்டேன்...
வாழ்வின் நான்
அர்த்தங்களை உணராமல்...
இதோ
என் புதிய பயணம்.....
***முதல்பூ.பெ.மணி.....***