மீட்டாத வீணையடி
மொட்டிலே சருகாகிறது
இளம்பிறை ஒன்று/
கற்கலோடு தேய்கிறது
பொற்கரங்கள் இரண்டு /
ஏழ்மையோ ஆசைகளை
அறுத்து விட்டது/
தாழ்த்தப்பட்ட வாழ்வோ
அணைத்துக் கொண்டது/
இன்ப நாதம்
இணைந்திடாத கருவி /
துன்பக் கீதம்
அமைக்கின்றது கண்ணீரில்/
உள்ளத்து ஆசைகளை
எள்ளளவும்
மீட்டாத வீணைகள் /