நேர்மையான அதிகாரி திருcகுப்புசாமி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டுக்கவி
முப்பது ஆண்களுக்கு முன்
நிறுவனத்தில் கொட்டிக்கிடந்தது
குப்ப சாமி
அதைத் தன் அறிவு கொண்டு
சுத்தமாக்கியவர்தான் குப்புசாமி
ஊழல் செய்தால் அது தப்பு சாமி
ஊழல் என்ற வார்த்தையை தன் அகராதியில் இருந்து அழித்தவர்தான் நம்ம ஜி எம் குப்புசாமி
பான்லேவில் பலருக்கு வேலை கொடுத்தவர் சிஎம் ரங்கசாமி
பான்லேவிற்கு பூஞ்சோலை கொடுத்தவர் ஜிஎம் குப்புசாமி
இவர் சில நெருக்கடியான சூழ்நிலைகளில் பால் பண்ணைக்கே பால் வளர்த்தவர்
இவர் பான்லேவில் ஒரு பூவை உருவாக்கியவர்
இவர் உருவாக்கிய
பூதான் பராமரிப்பு
பிரிவு
சரிவில் இருந்தது நிலைமை
அதை சரி செய்தது இவரின் நீலமை
மற்றும் ஆங்கிலப் புலமை
மருத்துவர் பொறியாளர் என வளர்ச்சி அடைந்த அவருடைய மூன்று பெண்ணை விட அவர் மிகவும் நேசிப்பது
பான்லே வளர்ச்சிக்காக கோப்புகளில் கையெழுத்திட பயன்படும் அவரின்
ஒரே பென்னைத்தான்
இவர் பனி காலத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிந்தவர்
பாலை பற்றி நன்கு தெரிந்தவர்
வாளைச்சுழற்றி பிரச்சனைகளை இரண்டாக அரிந்தவர்
தொழிலாளர்களின் கவலைகளை நன்கு அறிந்தவர்
பால் உற்பத்திக்காக தமிழகம் முழுவதும் சுற்றி திரிந்தவர்
இவருக்குப் பால் மணம் என்பதால் சில நேரம் பாலை போல் வேதனையில் திரிந்தவர்
பயன்படாததை பான்லேவிலிருந்து தூக்கி எறிந்தவர்
பான்லேவின் நலன் காக்க
சில நேரம் சீதை போல் எரிந்தவர்
இவர் முத்தியால்பேட்டையில்
வாழும் முத்து
தனக்கென்று பெரிதாய் ஏதும் சேர்த்து வைக்கவில்லை இவர் சொத்து
பால்வின் வளர்ச்சிக்கு இவர்தான்
ஊன்றினார் வித்து
இவரைப் பான்லே எடுத்துக் கொண்டது தன் பிள்ளையாக தத்து
நீங்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் கனி
நிறைவடைவதோ உங்களின் பணி
உங்களைப் பிரிந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் இனி
நீங்கள் பாண்லேவின் நிர்வாகத்திற்கு தலைமை ஏற்றவர்
நீங்கள் வெண்மையான உங்கள்
தலைக்கு கருமை ஏற்றவர்
பேச்சில் கரும்பை ஏற்றவர்
அறிவில் கூர்மை ஏற்றவர்
செயலில் நேர்மை ஏற்றவர்
தேசிய நெடுஞ்சாலையாய்
உம் புகழ் நீண்ட இருக்கட்டும்
இவ் உலகை ஆண்டு இருக்கட்டும் அதற்கு துணையாய் இந்த ஆண்டு இருக்கட்டும்