பேசுந்தமிழ்

வீணரென்று ஏசுவாரவர் வாய்யிலே வீரங்காட்டி
உணர்ந்துப் பார்த்தால் உண்மையது தெளியும்
பட்டாடைக்கும் காலாவதியாகும் நேரமுண்டு உலகிலே
பாட்டிற்கு(உ)கந்த பேசுந்தமிழும் அழியாதே.

மூடிவைத்த எழுதுகோல் உதவாது எழுதுவதற்கு
மூடிமறைத்து சொல்வதும் புரியாது எளியோர்க்கு
பாடிவைப்போம் எல்லோருக்கும் புரியும் தமிழில்
வாடிநிற்காதே மறுப்புமொழி கேட்டு.

சமசுகிருதமே வேதமொழியென்று வாதிடுவார் பேதையர்
சமமாகாது எந்தாய்த்திருத் தமிழுக்கு உலகிலே
உள்ளதை உள்ளபடியும் புரியும்படியும் உரைக்க
உள்ளம் கொள்ளவேண்டாம் அச்சம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Dec-22, 11:49 pm)
பார்வை : 590

மேலே