குப்பை கிளைப்போவாக் கோழி – நாலடியார் 341
நேரிசை வெண்பா
(’ப்’ ’க்’வல்லின இனவெதுகை)
கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும். 341
- கீழ்மை, நாலடியார்
பொருளுரை:
கடமையாக நாடோறும் நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பை கிளைத்தலை விடாத கோழியைப்போல், மிக்க பெருமை நிறைந்த மெய்ந் நூலுண்மைகளைப் பொருள் விளக்கி அறிவுறுத்தாலும் கீழ்மையான குணமுடையோர் தன் மனம் விரும்பிய வழியே முனைந்தொழுகுவர்.
கருத்து:
கீழ்மையான குணமுடையோர் பிறர்கூறும் அறிவுரையை ஏற்க மாட்டார்கள்.