வாழ்க்கை எனும் ஆட்டம்
கோடையில பீச்சு காத்து வாங்கப், போக நாட்டம்
புயல் அறிவிப்பு வந்தாலோ பீச்சிலிருந்து ஓட்டம்
முதல்தேதி சம்பளம் வந்தவுடன் ஆட்டம் பாட்டம்
பத்து தேதி முடிந்தவுடன் என்ன ஒரு திண்டாட்டம்
காசிருக்கும் வரை நம்மைச்சுற்றி எவ்வளவு கூட்டம்
இல்லையேல் வாழ்க்கை ஆகிடும் காய்ந்த தோட்டம்
மனிதனே நீ வசதி கண்டால் போடுகிறாய் சதிராட்டம்
நினைவுகொள் எந்நேரமும் முடியலாம் இந்த ஆட்டம்