சினத்தை வென்றவர் சிவபதம் பெறுவர் - அறநெறிச்சாரம் 206
நேரிசை வெண்பா
(’த்’ ‘க்’ வல்லின எதுகை) (’ய்’ இடையின ஆசு)
கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை - வெட்டெனக்
கா’ய்’த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார். 206.
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தம் மீது கோபமுற்று பிறர் வன்சொற்களைச் சொல்லுமிடத்தும்,
கடுகடுத்துத் தம்மைத் தாக்க வருதலைக் காணுமிடத்தும்,
கல்லை உடைக்கும்பொழுது அதனிடைத் தோன்றும் தீயேபோல் விரைந்து தோன்றும் கோபத்தை மிகுதியாகாதபடி அடக்க வல்லவர் யாரோ அவரே முக்தி இன்பத்தினை அடைபவராவார்.
குறிப்பு: மோக்கம் - மோட்சம்:
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
