என் உயிரில் கலந்தவளே 555
![](https://eluthu.com/images/loading.gif)
***என் உயிரில் கலந்தவளே 555 ***
உயிரானவளே...
தீயில் விழுந்த
எதுவும் நிறம் மாறும்...
சங்கு தீயில்
விழுந்தாலும் நிறம் மாறுவதில்லை...
உன்னை
நேசிக்கும் என்னை...
நீ வெறுத்தாலும்
வசைபாடினாலும்...
உன்மீதான
நேசம் என்றும் குறையாது...
கூட்டுக்குள் இருக்கும் புழு
அருவருப்புதான் எல்லோருக்கும்...
பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும்
போது ரசிக்காதவர்கள் யார்...
தோற்றத்தில்
நான் முரடன்தான்...
உனக்குள்
இடம் தந்துபார்...
நீயும் பட்டாம்பூச்சியாய்
விண்ணில் சிறகடிப்பாய்...
முட்செடியில் மலரும்
ரோஜாவைப்போல...
கரடுமுரடான என்
வாழ்வில் மலராக நீ வருவாயா...
தேக்கிவைத்த என்
சோகங்களை எல்லாம்...
உன் மார்பில் தலைசாய்த்து
நான் சொல்லிவிட வேண்டும்...
மணியோசை கேட்டு இன்றுவரை
நான் காலையில் எழுந்ததில்லை...
இனி உன் குரல் ஓசை கேட்டு
நான் தினம் எழவேண்டும் காலையில்...
என் வாழ்வில் வருத்தங்கள்
பல இருந்தாலும்...
என் மனதில் இருப்பது
நீ மட்டும்தான்...
உயிர்கொண்ட பூவே என்
உயிரில் கலந்துவிடுவாயா.....
***முதல்பூ.பெ.மணி.....***