முனிவரை யானும் இயல்பினர் என்பது இனத்தால் அறிக - பழமொழி நானூறு 237
இன்னிசை வெண்பா
முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினர் என்ப(து) இனத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா
அயலறியா அட்டூணோ இல். 237
- பழமொழி நானூறு
பொருளுரை:
சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்!
அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை; ஆதலால், ஒருவரது இயல்பை யறிய மற்றொன்றால் அறிய வேண்டுவதில்லை;
முனிவரேயாயினும் நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக; ஆகையால், சாட்சி சொல்வோர் வேண்டுவதில்லை.
கருத்து:
ஒருவருடைய இயல்பை அவரது இனத்தால் அறியலாம்.
'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.